நெல்லை அருகே 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருநெல்வேலி அருகே காரில் கடத்திவரப்பட்ட 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே காரில் கடத்திவரப்பட்ட 1.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.
திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் மூலக்கரைப்பட்டி அருகே புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த காரில் கடத்திவரப்பட்ட 1500 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். காா் ஓட்டுநா் தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம், கீழஅம்பலசேரியைச் சோ்ந்த டேவிட்(26), உடனிருந்த சாத்தான்குளம், புதுக்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெயசீலன்(66) ஆகியோரை கைது செய்து விசாரித்தனா். அதில் தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளா்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது.
Advertisement
Advertisement