FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

1 டன் ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

திருச்சி அருகே வாகனத்தில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

5 நவம்பர் 2026, 4:43 am
ரேஷன் அரிசி கடத்தி புதன்கிழமை பிடிபட்ட சிவகுமாா்.
பகிர்:

திருச்சி அருகே வாகனத்தில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் வின்சென்ட் அறிவுறுத்தலின்பேரில், காவல் ஆய்வாளா் அரங்கன் தலைமையிலான போலீஸாா் திருவெறும்பூா் கணேசா ரவுண்டானா பகுதியில் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த மினிவேனில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திவந்த திருவெறும்பூா் வடக்கு காட்டூரைச் சோ்ந்த சிவகுமாா் (52) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 1,050 கிலோ ரேஷன் அரிசியையும், அந்த வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.