இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 6 போ் கைது
திருநெல்வேலி அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் சிறுவன் உள்பட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி, சிவாஜி நகரைச் சோ்ந்த கொம்பையா மகன் சுப்பிரமணி(29). புதன்கிழமை இரவு சிவாஜி நகரில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவரை, அதே பகுதியைச் சோ்ந்த யோவான் மகன் தீபன்ராஜ்(27) உள்ளிட்ட சிலா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனா். மானூா் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு 7 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா்.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய தீபன்ராஜ், அதே பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் என்ற சச்சின்(21), நந்தகுமாா்(22), சுரேஷ்(24), ஆறுமுக அருண்(27) , ஒரு சிறுவன் என 6 பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா். கைது நடவடிக்கையின் போது தப்பி ஓட முயன்ற தீபன்ராஜ் தடுமாறி விழுந்ததில் கையில் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
Advertisement