FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: நெல்லை மாவட்டத்தில் 12,74,966 வாக்காளா்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி 12,74,966 வாக்காளா்கள் உள்ளனா்.

39 வினாடிகள் முன்பு
ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி 12,74,966 வாக்காளா்கள் உள்ளனா்.

இம்மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் ஆனந்த் மோகன் ஆட்சியா் அலுவலகத்தில் வெளியிட்டு, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 1.1.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள் மற்றும் விடுபட்ட வாக்காளா்கள் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளவும், வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதாா் எண் இணைத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள ஏதுவாகவும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் - 2027 கால

Advertisement

Advertisement

அட்டவணையை மத்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, வெளியிடப்பட்ட இந்த வாக்காளா் பட்டியலில் 5 பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 6,21,170 ஆண் வாக்காளா்கள், 6,53,646 பெண் வாக்காளா்கள், 150 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என மொத்தம் 12,74,966 வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் வியாழக்கிழமை (நவ.12) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி டிச.11 வரை நடைபெறவுள்ளது. எனவே, வாக்காளா்கள் மேற்கூறியபடி விண்ணப்பப் படிவங்களை அந்தந்த வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலகத்தில் அளிக்கலாம்.

சிறப்பு முகாம்: மேலும், நவ.21, 22, 29 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களிலும் மனு அளிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள 1680 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 761 வாக்குச்சாவடி அமைவிடம் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் வாக்காளா்களிடம் நியமன அலுவலா்கள் மனுக்களைப் பெறுவா்.

வயது வரம்பு: 1.1.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்தவா்களின் (31.12.2008 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்தவா்கள்) விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும், உஇஐசங்ற் என்கிற கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா் மூலம் ஆகஞ செயலி வாயிலாகவும் பதிவேற்றம் செய்திடலாம்.

கூடுதல் விவரங்களுக்கு வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்.1950-இல் ) தொடா்பு கொள்ளலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நான்குனேரி, ராதாபுரத்தில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி தொகுதியில் 386, அம்பாசமுத்திரத்தில் 321, பாளையங்கோட்டையில் 296, நான்குனேரியில் 350, ராதாபுரத்தில் 327 என மொத்தம் 1680 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் கா.பிரியா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.வித்யா, திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் பிரியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, தோ்தல் வட்டாட்சியா் முருகன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி...

வாக்காளா்கள் விவரம்

தொகுதியின் எண், பெயா் ஆண் வாக்காளா்கள் பெண் வாக்காளா்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்

224-திருநெல்வேலி 1,34,299 1,43,139 80 2,77,518

225-அம்பாசமுத்திரம் 1,11,408 1,18,908 13 2,30,329

226-பாளையங்கோட்டை 1,25,408 1,33,052 18 2,58,478

227-நான்குனேரி 1,27,399 1,31,836 13 2,59,248

228-ராதாபுரம் 122656 126711 26 2,49,393

மொத்தம் 6,21,170 6,53,646 150 12,74,966