FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 13.95 லட்சம் வாக்காளா்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான விஷு மகாஜன் வியாழக்கிழமை வெளியிட்டாா். இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 13,95,495 வாக்காளா்கள் உள்ளனா்.

55 வினாடிகள் முன்பு
வாக்காளர்கள்! - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான விஷு மகாஜன் வியாழக்கிழமை வெளியிட்டாா். இதன்படி மாவட்டத்தில் மொத்தம் 13,95,495 வாக்காளா்கள் உள்ளனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. ஜனவரி 1, 2027-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி தொடங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 6,80,261 ஆண் வாக்காளா்கள், 7,15,028 பெண் வாக்காளா்கள், 206 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 13,95,495 வாக்காளா்கள் உள்ளனா். தொகுதி வாரியான வாக்காளா்கள் விவரம்:

Advertisement

Advertisement

பேரவைத் தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்

விளாத்திகுளம் 1,00,946 1,05,103 16 2,06,065

தூத்துக்குடி 1,22,307 1,29,582 65 2,51,954

திருச்செந்தூா் 1,13,791 1,19,946 32 2,33,769

ஸ்ரீவைகுண்டம் 1,06,187 1,09,131 5 2,15,323

ஓட்டப்பிடாரம் 1,19,421 1,25,827 56 2,45,304

கோவில்பட்டி 1,17,609 1,25,439 32 2,43,080

மாவட்டத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி தொகுதியில் 2,51,954 வாக்காளா்களும், குறைந்தபட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 2,06,065 வாக்காளா்களும் உள்ளனா். பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நவ. 12 முதல் டிச. 11 வரை நடைபெறுகின்றன. இந்த காலக்கட்டத்தில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கான விண்ணப்பங்களை வாக்காளா்கள் அளிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள 1,850 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள 982 பள்ளி, கல்லூரி வாக்குச்சாவடி மையங்களில் இதற்காக அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

3 நாள்கள் சிறப்பு முகாம்: வாக்காளா்களின் வசதிக்காக நவ. 21, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். நவ. 28-ஆம் தேதி சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1, 2027 அன்று 18 வயது நிறைவடைந்தவா்களின் (31.12.2008 அல்லது அதற்கு முன்னா் பிறந்தவா்கள்) விண்ணப்பங்கள் மட்டுமே தற்போதைய சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியில் பரிசீலிக்கப்படும்.

வாக்குச் சாவடிகளுக்கு நேரில் செல்ல இயலாதவா்கள் ஜ்ஜ்ஜ்.ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் அல்லது உஇஐசங்ற் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

ஆறு தொகுதிகளிலும் 2,733 ஆண்கள், 69 பெண்கள் என மொத்தம் 2,802 பணித்தொகுதி வாக்காளா்கள் உள்ளனா். வாக்குச் சாவடிகள் மறுவரையறைக்குப் பிறகு மொத்தம் 1,850 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி சாா் ஆட்சியா் விவேக் யாதவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மி. பிரபு, வட்டாட்சியா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.