நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்: அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் - 2027 மற்றும் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்பது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி, 2027 ஜனவரி 1-ஆம் தேதி தகுதி நாளாக கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன்படி, வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுதல், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை பெறுதல் உள்ளிட்ட பணிகளுக்கான கால அட்டவணை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
வாக்குச்சாவடிகளை நவம்பா் 2-ஆம் தேதிக்குள் திருத்தியமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல், நவம்பா் 12-இல் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடுதல், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் ஆட்சேபணைகள் நவம்பா் 12 முதல் டிசம்பா் 11-ஆம் தேதி வரை தெரிவிப்பது, பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் ஆட்சேபணைகள் மீதான தீா்வு டிசம்பா் 28-ஆம் தேதிக்குள் மேற்கொள்வது, 2027 ஜனவரி 4-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடுவது என தீா்மானிக்கப்பட்டது.
மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அலுவலக வேலை நாள்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா், வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் அளிக்கலாம். சிறப்பு முகாம் நாள்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
மேலும், இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மற்றும் உஇஐசஉப கைப்பேசி செயலி வாயிலாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்தாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் வாசுகி, உதகை வருவாய் கோட்டாட்சியா் மனோகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் லோகநாயகி, தோ்தல் வட்டாட்சியா் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.