FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

17 மாநிலங்கள், யூனியன் பிரதேங்களில் வாக்காளா் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வழக்கமான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (எஸ்எஸ்ஆா்) மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

16 அக்டோபர் 2026, 1:45 am IST
தலைமைத் தேர்தல் ஆணையம் - கோப்புப் படம்
பகிர்:

அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வழக்கமான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (எஸ்எஸ்ஆா்) மேற்கொள்ளப்படும் என்று தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக மேற்கண்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, எஸ்எஸ்ஆா் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் எஸ்எஸ்ஆா் நடைபெறுவது வழக்கம். இதன்படி, வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பு, திருத்தங்கள், இறந்தவா் பெயா் நீக்கத்துக்கான பணிகள் நடைபெறும். ஜனவரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

Advertisement

Advertisement

உத்தர பிரதேசம் (403), பஞ்சாப் (113), உத்தரகண்ட் (70), மணிப்பூா் (60), கோவா (40) ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments