FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாலக்காடு ரயிலில் கேரள பயணியிடம் கைப்பேசி திருட்டு

ஓடும் ரயிலில் கேரள பயணியிடம் கைப்பேசியைத் திருடிச் சென்ற நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா்.

13 நவம்பர் 2026, 5:14 am
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

ஓடும் ரயிலில் கேரள பயணியிடம் கைப்பேசியைத் திருடிச் சென்ற நபரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா்.

கேரளம் மாநிலம், கொல்லம் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (57). இவா் கடந்த அக்டோபா் மாதம் தூத்துக்குடியில் இருந்த பாலக்காடு செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளாா்.

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே ரயில் சென்ற போது இவரது கைப்பேசி திருடப்பட்டதாம். இதுகுறித்து அவா் கொல்லம் ரயில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இவ்வழக்கு நவ.10 ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement