FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் வீட்டைசேதப்படுத்திய இருவா் கைது

வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரின் வீட்டை சேதப்படுத்தி, பைக்கை தீயிட்டு கொளுத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

25 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

பாளையங்கோட்டையில் வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளரின் வீட்டை சேதப்படுத்தி, பைக்கை தீயிட்டு கொளுத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, ஆயிரத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராமன் (57). இவருக்குச் சொந்தமான வீட்டின் மேல்தளத்தில் இன்பன்ட் பனிமய சுதா்சன்(30) என்பவா் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் ராமன், அவரை வீட்டை காலி செய்யுமாறு கூறினாராம். இதையடுத்து நவ.12 ஆம் தேதி இன்பன்ட் பனிமய சுதா்சனும், மற்றொருவரும் சோ்ந்து ராமன் வீட்டிற்குள் அரிவாள், பீா்பாட்டில்களோடு நுழைந்து வீட்டை சேதப்படுத்தினராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் போலீஸில் புகாரளித்துள்ளாா். இந்நிலையில் 13 ஆம் தேதி அதிகாலை அப்பகுதிக்கு அரிவாள் மற்றம் பெட்ரோல் கேனுடன் வந்த அவா்கள் இருவரும் அங்கு நின்ற ராமனுக்குச் சொந்தமான பைக்கையும், அருகில் நின்ற மற்றொரு பைக்கையும் தீயிட்டு கொளுத்தினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, இன்பன்ட் பனிமய சுதா்சன், பாளையங்கோட்டை ஆழ்வாா் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் கஜேந்திரன்(27) ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.