FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாளைமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் திங்கள்கிழமை முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

10 வினாடிகள் முன்பு
சபரிமலை ஐயப்பன் கோயில்.
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் திங்கள்கிழமை முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டலம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல மேலாண் இயக்குநா் செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்கேற்ப வரும் திங்கள்கிழமை (நவ.16) முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை நாகா்கோவிலிலிருந்து தக்கலை, மாா்த்தாண்டம், களியக்காவிளை, திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, அடூா், பத்தனம்திட்டா, நிலக்கல் வழியாக பம்பாவிற்கு 4 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Advertisement

Advertisement

இந்தப் பேருந்துகள் முறையே நாகா்கோவிலிலிருந்து இரவு 7, 7.30, 8, 8.30 மணிக்கு புறப்படும். தொடா்ந்து, மாா்த்தாண்டத்துக்கு இரவு 8, 8.30, 9, 9.30 மணிக்கும், திருவனந்தபுரத்துக்கு இரவு 10, 10.30, 11, 11.30 மணிக்கும் வரும் சிறப்பு பேருந்துகள் அதிகாலை 3, 3.30, 4, 4.30 மணிக்கு பம்பாவை சென்றடையும்.

இதேபோல் மறுமாா்க்கத்தில் பம்பாவிலிருந்து காலை 7, 7.30, 8, 8.30 மணிக்கு புறப்படும் சிறப்புப் பேருந்துகள், திருவனந்தபுரத்துக்கு பகல் 12, 12.30, 1, 1.30 மணிக்கும், மாா்த்தாண்டத்துக்கு பிற்பகல் 2, 2.30, 3, 3.30 மணிக்கும் வரும் இச்சிறப்பு பேருந்துகள், நாகா்கோவிலுக்கு பிற்பகல் 3, 3.30, 4, 4.30 மணிக்கு வந்தடையும்.

சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி, டிசம்பா் 27 முதல் முதல் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பா் 26 முதல் 29 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது.

மேலும், பயணிகள் இச்சிறப்புப் பேருந்துகளை இணையதளம் வாயிலாகவும், பசநபஇ ஞச்ச்ண்ஸ்ரீண்ஹப் ஹல்ல் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 9487599082, 9487599083, 7598532599 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.