FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வெளியானது முக்கிய அறிவிப்பு! ஆயுதபூஜை, தீபாவளிக்கு எத்தனை சிறப்புப் பேருந்துகள்?

ஆயுதபூஜை, தீபாவளிக்கு எத்தனை சிறப்புப் பேருந்துகள் என்பது குறித்த முக்கிய அறிவிப்பு பற்றி..

14 வினாடிகள் முன்பு
சிறப்புப் பேருந்துகள் - படம்: X/ arasu bus
பகிர்:

வரும் வாரத்தின் தொடக்கமே ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை நாள்கள் என்பதால் சிறப்புப் பேருந்துகள் தொடர்பான அறிவிப்புகளுக்காக பலரும் காத்திருக்கும் நிலையில், அது பற்றிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஆயுதபூஜைக்காக 9,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

மேலும், முக்கிய நாள்கள் மற்றும் வார இறுதி நாள்களில் அறிவிக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் ரத்து செய்யப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜையை முன்னிட்டு 8,390 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். ஆயுத பூஜைக்கு அக். 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மட்டும் 6,199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்

நாள்தோறும் சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,191 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து ஆயுதபூஜைக்கு சிறப்புப் பேருந்துகள் 6199 இயக்கப்படும். நான்கு நாள்களுக்கும் சேர்த்து 14,963 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கிறது.

தீபாவளி நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், நவம்பர் 5ஆம் தேதி 2,647 சிறப்புப் பேருந்துகளும், 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை 5,771 சிறப்புப் பேருந்துகளும், 7ஆம் சனிக்கிழமை 5,167 பேருந்துகளும் என மொத்தமாக தீபாவளிக்கு 15,659 பேருந்துகள் இயக்கப்படும். இவை அல்லாமல் 370 தனியார் பேருந்துகள் அவசர தேவைக்கு வாடகைக்கு எடுத்து வைக்கப்படவிருக்கிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments