FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளிக்கு அதிகம் ஆர்டர் செய்யப்பட்டதில் முதல் இடம்பிடித்த இனிப்பு!

தீபாவளிக்கு அதிகம் ஆர்டர் செய்யப்பட்டதில் முதல் இடம்பிடித்த இனிப்பு பற்றி...

தீபாவளி இனிப்பு - EPS
பகிர்:

நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், ஆன்லைன் உணவு டெலிவரி செலியகள் மற்றும் உணவகங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட இனிப்புகளில் முதல் இடம்பிடித்திருப்பது முந்திரியால் செய்யப்படும் காஜு கட்லி எனப்படும் இனிப்பு வகை.

இது குறித்து ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்துவரும் ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்ட தகவலில், நவம்பர் 6- 8ஆம் தேதி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கம் 97,545 உணவு ஆர்டர்கள் வரப்பெற்றதாகவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் உணவு ஆர்டர் 10.7 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மசாலா தோசை, காஜு கட்லி அல்லது காஜு பர்ஃபி, பன்னீர் பட்டர் மசாலா போன்றவைதான் நாடு முழுவதும் அதிகம் ஆர்டர் செய்த உணவுகளில் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, தீபாவளி என்றாலே குலாப் ஜாமுன் மாவு வாங்கி வந்து வீட்டில் செய்து அக்கம் பக்கத்தினருக்குக் கொடுத்த காலம் மலையேறிவிட்டது. இப்போது ஆன்லைன் மூலம் இனிப்புகள் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்துவிடுவதால் ஏராளமான இனிப்புகளும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்தான் காஜு கட்லி முதலிடம் வகிக்கிறதாம். அதற்கடுத்த இடத்தில் லட்டு, ரசகுல்லா, குலாப் ஜாமூன் போன்றவை இடம்பெற்றுள்ளனவாம்.

அதுபோல, மும்பையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மதிய உணவுக்கு ரூ.1.34 லட்சத்துக்கு ஸ்விக்கியில் உணவு ஆர்டர் கொடுத்துள்ளனர். ஒரே ஒரு பில்லில் ஒருவர் ரூ.1.34 லட்சம் செலுத்தியிருப்பதும் ஸ்விக்கியில் குறிப்பிடத்தக்க அம்சமாக மாறியிருக்கிறது.

குறிப்பாக, பெங்களூர், மும்பை, தில்லி, சென்னை நகரங்கள், அதிக உணவு ஆர்டர்கள் வந்த நகரங்களின் பட்டியலில் உள்ளன.

summary

The sweet that topped the list of most-ordered items for Diwali!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.