தீபாவளிக்கு சொந்த ஊர் செல்கிறீர்களா? எந்தப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்?
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்கள் எந்தப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்? என்பது குறித்து...
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்காக நவ. 5 முதல் நவ. 7 வரை 15,659 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதில் எந்தப் பேருந்துகள் எந்தெந்தப் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இன்று (நவ. 4) வெளியிட்டுள்ளது.
அதன்படி, பேருந்து நிலையங்கள் மற்றும் அங்கிருந்து இயக்கப்படும் ஊர்களின் பட்டியல் பின்வருமாறு:
Advertisement
Advertisement
கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம்
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
சிஎம்டிஏ காலநிலை பூங்கா அருகில் திறந்தவெளி இடம், கிளாம்பாக்கம். (தற்காலிக பேருந்து நிலையம்)
வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
மறைமலை நகர் தற்காலிக பேருந்து நிலையம்
கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு
கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
மாதவரம் புதிய பேருந்து நிலையம்
பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநில மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.