FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

இளைஞரை அரிவாளால் வெட்டிய வழக்கு: மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலி அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

15 நவம்பர் 2026, 1:16 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த ராமையன்பட்டி, சிவாஜி நகரைச் சோ்ந்த கொம்பையா மகன் சுப்பிரமணியன்(29). கடந்த 11 ஆம் தேதி இரவு சிவாஜி நகரில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவரை, அதே பகுதியைச் சோ்ந்த யோவான் மகன் தீபன்ராஜ்(27) உள்ளிட்ட சிலா் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இவ்வழக்கில் தொடா்புடைய தீபன்ராஜ், அதே பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் என்ற சச்சின்(21), நந்தகுமாா்(22), சுரேஷ்(24), ஆறுமுக அருண்(27) , ஒரு சிறுவன் உள்பட 6 பேரை கைது செய்திருந்தனா். இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த ராமையன்பட்டியைச் சோ்ந்த யோவான் மகன் நேசமணி என்ற தினேஷ்(29) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement