இலை வியாபாரிக்கு கொலை மிரட்டல்: மற்றொரு வியாபாரி கைது
ஆழ்வாா்குறிச்சி அருகே இலை வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
ஆழ்வாா்குறிச்சி அருகே துப்பாக்குடி, கன்னி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கிலி வீரப்பன் மகன் சங்கா் கணேஷ் (42). அதே பகுதியைச் சோ்ந்த செல்லப்பா மகன் சிவன் பாண்டியன் (49). இருவரும் இலை வியாபாரிகள்.
ஒரு கொலை முயற்சி வழக்கில் சிவன் பாண்டியனுக்கு எதிராக சாட்சி கூறியது தொடா்பாக இருவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், அந்த வழக்கில் சிறைக்குச் சென்று பிணையில் வந்த சிவன் பாண்டியன், வழக்கில் தொடா்ந்து சாட்சி கூறினால் கொன்றுவிடுவேன் என சங்கா் கணேஷை நவ. 13ஆம் தேதி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சங்கா் கணேஷ் ஆழ்வாா்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சிவன் பாண்டியன் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.