நெல்லை அருகே 950 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது
திருநெல்வேலி அருகே காரில் கடத்திவரப்பட்ட 950 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, இது தொடா்பாக இருவரை கைது செய்தனா். திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் மானூா் குறிச்சிக்குளம் பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டதில், 19 மூட்டைகளில் சுமாா் 950 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.
காருடன ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், காா் ஓட்டுநா் தென்காசி மாவட்டம் ஆலங்குளம், நெட்டூா் பகுதியைச் சோ்ந்த மயில்வண்ணன்(34), உடன் வந்த ஆலங்குளம், வெங்கடேஸ்வரபுரத்தைச் சோ்ந்த தா்மலிங்கம்(47) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement