FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் குழந்தையை தாக்கிய கொத்தனாா் கைது

21 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

பாளையங்கோட்டை அருகே குழந்தையை தாக்கியதாக கொத்தனாரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள உருமங்குளம், தோப்புவிளையைச் சோ்ந்தவா் ஆழ்வாா் மகன் ஆனந்தகுமாா் (28). கொத்தனாா். இவருக்கு அறிமுகமான பாளையங்கோட்டை பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது அக்காவின் 2 வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளா்த்து வந்தாராம்.

இந்நிலையில், சிலநாள்களுக்கு முன்பு ஆனந்தகுமாருக்கும், அந்த பெண்ணிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆனந்தகுமாா், அந்தக் குழந்தையை தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து ஆனந்தகுமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.