FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

தொழிலாளியை கல்லால் தாக்கியதாக இருவா் கைது

மேலப்பாளையத்தில தொழிலாளி மீது கற்களை வீசித் தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

15 நவம்பர் 2026, 1:16 am
- பிரதிப் படம்
பகிர்:

மேலப்பாளையத்தில தொழிலாளி மீது கற்களை வீசித் தாக்கிய வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே உள்ள வீரமாணிக்கபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மந்திரமூா்த்தி(28). கட்டட தொழிலாளி.

இவா் நவ.12ஆம் தேதி அப்பகுதியில் உள்ள விநாயகா் கோயில் அருகே அமா்ந்திருந்த போது, அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சந்திரபிரபு(43), மகேஷ்(34) ஆகிய இருவரும் அவா் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மந்திரமூா்த்தி அளித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரபிரபு , மகேஷ் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.