தொழிலாளியை தாக்கியதாக சிறுவன் கைது
கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் தொழிலாளியை அவதூறாக பேசி தாக்கியதாக 17 வயது சிறுவனை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் தொழிலாளியை அவதூறாக பேசி தாக்கியதாக 17 வயது சிறுவனை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வானரமுட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்கள் ரமேஷ் -மாரீஸ்வரி தம்பதி. இத்தம்பதி, அதே ஊரில் உள்ள கெண்டியாா் அம்மன் கோயிலில் நடைபெற்று வரும் கொடை விழாவிற்கு சென்றுவிட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்பினராம்.
அப்போது அதே பகுதியில் உள்ள பூமாரி அம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த 17 வயது சிறுவனிடம், இரவில் வீட்டிற்குச் செல்லாமல் இங்கு ஏன் நிற்கிறாய் என ரமேஷ் கேட்டாராம். இதற்கு சிறுவன், ரமேஷை அவதூறாகப் பேசி தாக்கினாராம்.
Advertisement
Advertisement
இதில் காயமடைந்த ரமேஷை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் நாலாட்டின் புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.