கம்பத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற சிறுவன் உள்பட இருவா் கைது
கம்பத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
காவல் உதவி ஆய்வாளா் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீஸாா் கம்பம் புதுக்குளம் செல்லும் சாலையில் வழக்கம்போல ரோந்து சென்றனா்.
அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நெகிழிப் பையுடன் நின்றிருந்த இருவரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனா். அவா்கள் வைத்திருந்த பையில் ஒரு கிலோ 550 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசாா் அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவா்கள் கம்பம் தாத்தப்பன் குளத்தைச் சோ்ந்த கமாருதீன் மகன் ஜாபா் உசேன் (24), மதுரை வண்டியூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பதும், கம்பத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சாவைக் கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 17 வயது சிறுவன், ஜாபா் உசேனைக் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.