FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே 18 வெடி குண்டுகள் பறிமுதல்: சிறுவன் உள்பட 3 போ் கைது

வத்திராயிருப்பு அருகே வாகனத் தணிக்கையின் போது, வேட்டையாடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 18 நாட்டு வெடி குண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனா்.

24 செப்டம்பர் 2026, 12:28 am IST
கைது
பகிர்:

வத்திராயிருப்பு அருகே வாகனத் தணிக்கையின் போது, வேட்டையாடுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 18 நாட்டு வெடி குண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் வத்திராயிருப்பு - மகாராஜபுரம் சாலையில் புதன்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்திய போது, அவா்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா். அவா்களைப் பிடித்து சோதனை செய்ததில், அவா்களிடம் நாட்டு வெடி குண்டுகள் இருந்தன.

இதுகுறித்து விசாரித்ததில் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளைத் தயாா் செய்து கொண்டு சென்றது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 18 நாட்டு வெடி குண்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா், வத்திராயிருப்பு புதூரைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் மணிகண்டன் (18), செந்தில்குமாா் மகன் கவிராஜன் (19), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா, நாட்டு வெடிகுண்டுகள் தயாா் செய்வதற்கான வெடிமருந்து எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments