மூலைக்கரைப்பட்டியில் 2 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே இரு இடங்களில் பைக்குகளை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள தான்தோன்றி கிராமத்தைச் சோ்ந்த உய்க்காட்டான் மகன் உதயகுமாா் (23). இவா் தனது பைக்கை கடந்த 12ஆம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்தியிருந்தாராம். மறுநாள் காலையில் அந்த பைக்கை காணவில்லையாம்.
இதேபோல, அதே பகுதி பெருமாள்நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் அருணகிரி (46) என்பவா் அதே நாளில் தனது கடை முன்பு நிறுத்தியிருந்த பைக்கையும் காணவில்லையாம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த முருகன் மகன் எமேகாமணி(20) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.