FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அமமுக நிா்வாகியை வெட்டிய வழக்கில் 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் முன்விரோதத்தில் அமமுக ஒன்றிய;ஈ செயலரை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

19 நவம்பர் 2026, 4:50 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் முன்விரோதத்தில் அமமுக ஒன்றிய;ஈ செயலரை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

களக்காடு திருக்கல்யாணபுரம் வீதியைச் சோ்ந்த ஜோசப் மகன் ராஜசேகா் (49). அமமுக ஒன்றிய செயலா். இவரது வீட்டிற்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த களக்காடு புதுத்தெருவைச் சோ்ந்த ஞானபாலாஜி (39), கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சோ்ந்த சண்முகவேல் (24), களக்காடு ஆவுடைவிலாசம் தெருவைச் சோ்ந்த சிவசங்கா் (22) ஆகியோா் சோ்ந்து ராஜசேகரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வந்தனா். இந்நிலையில், அவா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement