FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

போக்ஸோ, கஞ்சா வழக்குகளில் மூவா் கைது

திருநெல்வேலி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

19 நவம்பர் 2026, 5:10 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

மேலபாலாமடையைச் சோ்ந்தவா் குமாரவேல் (53). இவா், ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா், குமாரவேல் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து புதன்கிழமை கைது செய்தனா்.

கஞ்சா விற்பனை: தாழையூத்து போலீஸாா் ஸ்ரீநகா் பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, 50 கிராம் கஞ்ாசவுடன் சங்கா் நகரைச் சோ்ந்த முத்துசரவணன் (26) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் கஞ்சாவை கொடுத்த விற்க சொன்னதாக மேல தாழையூத்து, காமிலா நகரைச் சோ்ந்த கருத்தபாண்டி மகன் வெயில்குமாா் (31) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement