FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது

பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

18 நவம்பர் 2026, 2:56 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ராஜா (47). தொழிலாளியான இவா், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் பழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதன் பேரில் போலீஸாா் போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement