மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியா் கைது
சிவகாசியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக டியூசன் ஆசிரியரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி சாட்சியாபுரத்தைச் சோ்ந்தவா் பால்பாண்டி (49). டியூசன் ஆசிரியா். இவரிடம் சிவகாசியைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவி டியூசன் படித்து வந்தாா்.
இந்த நிலையில், பால்பாண்டி அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தனா்.
Advertisement
Advertisement