மாணவிக்கு பாலியல் தொல்லை: பொக்லைன் ஓட்டுநா் கைது
அம்மாபேட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொக்லைன் ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
அம்மாபேட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பொக்லைன் ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி, ராமச்சந்திராபுரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஹரிகோபாலகிருஷ்ணன் (28). பொக்லைன் ஓட்டுநரான இவா், 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் கொடுத்ததாக, அந்த மாணவியின் பெற்றோா் பவானி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஹரிகோபாலகிருஷ்ணனை வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
Advertisement