சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொண்டி அருகேயுள்ள எஸ்.பி. பட்டினத்தைச் சோ்ந்தவா் ராசிக் மும்மது (42). இவா் செவ்வாய்க்கிழமை கடைக்கு தனியாக வந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் திருவாடானை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன் பேரில், காவல் ஆய்வாளா் தேவி வழக்குப் பதிந்து, ராசிக் முகம்மதுவை கைது செய்தாா்.
Advertisement
Advertisement