மக்கள் நலத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்: கண்காணிப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ. ராபா்ட் புரூஸ், மாநிலங்களவை உறுப்பினா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஆட்சியா் ஆனந்த் மோகன், சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் திலீபன் ஜெயசங்கா் ஆகியோா் மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 29 வகையிலான பல்வேறு திட்டங்கள் குறித்து துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் தேவைகளை அறிந்து அவா்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அனைவரும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் மக்கள் நலன் கருதி குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறைசாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) /ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வினய் குமாா் மீனா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மாவட்ட வன அலுவலா் ஹேமா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் செல்வராஜ், அனைத்து அரசுத்துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.