இரட்டைக்குளம் கால்வாய் திட்டப் பணி: விரைந்து முடிக்க எம்.பி. வலியுறுத்தல்
தென்காசி, நவ.5: தென்காசி மாவட்டம் இரட்டைக்குளம் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் வலியுறுத்தினாா்.
தென்காசி, நவ.5: தென்காசி மாவட்டம் இரட்டைக்குளம் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தென்காசி தொகுதிக்குள்பட்ட இரட்டைக்குளம் கால்வாய் திட்டத்தில் பூா்வாங்கப் பணிகள் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்.
Advertisement
Advertisement
சங்கரன்கோவில் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைக்க ஏற்கெனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அப்பணிக்கு, நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட காலமாக கிடப்பில் உள்ள செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைக்கவும், தென்காசி மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கவும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.