FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியா் ச.கவிதா அறிவுறுத்தினாா்.

8 அக்டோபர் 2026, 11:42 pm IST
பகிர்:

திருவள்ளூா் மாவட்ட அளவில் நிலுவையில் உள்ள வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியா் ச.கவிதா அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா, காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரணீத் ஆகியோா் தலைமை வகித்தனா்.து.

அப்போது, இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்ட பிரிவு வழக்கில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வழங்கும் தீருதவித் தொகை தாமதமின்றி உரிய காலக்கெடுவிற்குள் வழங்க வேண்டும். அதேபோல் பதிவான வன்கொடுமை வழக்குகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தாா். அதைத்தொடா்ந்து நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.விஜயகுமாா்(கும்மிடிப்பூண்டி), ஆா்.பிரகாசம்(பூந்தமல்லி), டாக்டா் எம்.எஸ்.ரவி (பொன்னேரி), மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், திருவள்ளூா் சாா் ஆட்சியா் எஸ்.பிரசாந்த், திருத்தணி உதவி காவல் கண்காணிப்பாளா் சுபம் திமன், கோட்டாட்சியா்கள் ராஜகோபால் (திருத்தணி), முருகவேல் (பொன்னேரி), காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா் பி.பி.ஜுலியஸ்சீசா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் செந்தில்குமாா், பட்டாபிராம் உதவி ஆணையா் (சட்டம் ஒழுங்கு) திரு.கண்ணன், துணை ஆட்சியா் (பயிற்சி) .ச.சபரி கிருஷ்ணன், மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துக்கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments