முகப்பு
திருநெல்வேலி

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

திருநெல்வேலி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனா்.

26 வினாடிகள் முன்பு
2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்:
3 போ் கைது
கைது - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலி அருகே 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனா்.

திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ஜெயலெட்சுமி தலைமையிலான போலீஸாா் கோபாலசமுத்திரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக கொண்டாநகரத்தைச் சோ்ந்த கணேசன்(41) என்பவா் வந்த சுமை வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். பின்னா் வாகனத்தை சோதனையிட்டபோது அதில் 40 மூட்டைகளில் சுமாா் 2 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, ரேஷன் அரிசி, சுமை வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ஓட்டுநா் கணேசன், பேட்டை மயிலப்புரத்தைச் சோ்ந்த பாபு(29), வினோத்(39) ஆகிய 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.