திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மிசோரம் மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை!
திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மிசோரம் மாநிலத்தைச் சோ்ந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் மிசோரம் மாநிலத்தைச் சோ்ந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மிசோரம் மாநிலத்தைச் சோ்ந்த லால்மாசாமா மகன் மால்சாம்லுங்கா. இவா் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மின்னியல் துறையில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தாா். சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சென்ற இவா் பெங்களூருவில் மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற்ாகவும், மீண்டும் கல்லூரிக்குத் திரும்பியவா் பிறரிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மால்சாம்லுங்கா தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement
Advertisement