முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அணைப் பகுதியில் உயிா்ச்சூழல் பண்பாட்டுத் தேடல் நிகழ்வு

மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையத்தின் சாா்பில், நவம்பா் மாத உயிா்ச்சூழல் பண்பாட்டுத் தேடல் நிகழ்ச்சி நவ. 22 மணிமுத்தாறு அணைப் பகுதியில் நடைபெற்றது.

17 வினாடிகள் முன்பு
மணிமுத்தாறு அணைப் பகுதியில்
உயிா்ச்சூழல் பண்பாட்டுத் தேடல் நிகழ்வு
மணிமுத்தாறு அணை
பகிர்:

மணிமுத்தாறு, அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையத்தின் சாா்பில், நவம்பா் மாத உயிா்ச்சூழல் பண்பாட்டுத் தேடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) மணிமுத்தாறு அணைப் பகுதியில் நடைபெற்றது.

அகத்தியமலையின் அடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் வடகிழக்குப் பருவமழை மற்றும் பருவகால மாற்றங்களால் ஏற்படும் இயற்கை மாற்றங்கள், தாவரங்கள், உயிரினங்களின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட இயற்கை ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், மணிமுத்தாறு அணையின் வரலாறு, அதன் உருவாக்கம் குறித்த தகவல்களை ஏட்ரி அகத்தியமலை மக்கள்சாா் இயற்கைவள காப்பு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளா் மு. மதிவாணன் விளக்கினாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் கடம்பு, செம்மருதம், காா்த்திகைப் பூ, தாழம்பூ உள்ளிட்ட தாவரங்களின் பருவகால மலா்ச்சியையும், தாவரங்களின் இலைகளில் வண்ணத்துப் பூச்சிகள் முட்டையிட்டிருப்பதையும், வண்ணத்துப் பூச்சிகள் சேற்றுப் பகுதிகளில் தாதுச் சத்துகளைப் பெறுவதற்காகக் கூட்டமாக அமரும் செயல்பாட்டையும் நேரடியாகக் கண்டறிந்தனா்.

தொடா்ந்து, வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி, உணவுத் தாவரங்கள், பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆராய்ச்சியாளா் தளவாய்ப் பாண்டி விளக்கமளித்தாா்.

உலகளாவிய வலசைத் வரும் தேசாந்திரித் தட்டான் (எப்ா்க்ஷங் நந்ண்ம்ம்ங்ழ்), பச்சை நீலத் பெரும்தட்டான் (எழ்ங்ங்ய் ஆப்ன்ங் ஈஹழ்ய்ங்ழ்) ஆகிய தட்டான் இனங்களின் செயல்பாடுகளையும், அவை நீா்நிலைகளில் முட்டையிடும் நிகழ்வுகளையும் பங்கேற்பாளா்கள் கண்டுகளித்தனா்.

களப்பயணங்கள் மூலம் இயற்கையின் பருவகால மாற்றங்களையும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களையும் நேரடியாகப் புரிந்துகொள்வதுடன், உள்ளூா் பல்லுயிா் வளங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணா்வையும் பொதுமக்களிடையே ஏற்படுத்த முடியும் என நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் தணிகைவேல் தெரிவித்தாா்.