முகப்பு
திருநெல்வேலி

குப்பையில் கிடந்த வெடி வெடித்ததில் தீ விபத்து

31 வினாடிகள் முன்பு
குப்பையில் கிடந்த வெடி
வெடித்ததில் தீ விபத்து
தீ - கோப்புப் படம்
பகிர்:

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட கோட்டைவிளைப்பட்டியில் குப்பையில் கிடந்த வெடி வெடித்தில் தீ விபத்து நேரிட்டது.

கோட்டைவிளைப்பட்டியில் ஊருக்கு வெளியே தெருவோரத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைக் கழிவுகளில் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. அப்போது குப்பையில் கிடந்த வெடிக்காத வெடி மீது நெருப்பு பற்றியதில் தீ வேகமாகப் பரவியது.

இதில் அருகிலிருந்த தென்னை மரத்திலும் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து அப் பகுதியினா் கொடுத்த தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு வந்த அம்பாசமுத்திரம் தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுப்படுத்தினா்.

Advertisement

Advertisement