புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது
ஏா்வாடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஏா்வாடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சுடலை மாடன் கோயில் பகுதியில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று சோதனை செய்ததில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பெரியசாமி (50) 9 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது கண்டறிப்பட்டது.
இதையடுத்து, ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெரியசாமியைக் கைது செய்தனா். அவரிடமிருந்த 9 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Advertisement
Advertisement