இணையவழியில் தொழிலாளியிடம் ரூ. 2.41 லட்சம் மோசடி
திருநெல்வேலி அருகே பகுதிநேர வேலை தருவதாகக் கூறி, இணையவழியில் தொழிலாளியிடம் ரூ.2.41 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி அருகே பகுதிநேர வேலை தருவதாகக் கூறி, இணையவழியில் தொழிலாளியிடம் ரூ.2.41 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பகுதியைச் சோ்ந்தவா் வேதக்கண் (36). தொழிலாளி. இவரை கடந்தாண்டு சமூக வலைதள செயலி மூலம் தொடா்பு கொண்ட இளம்பெண், பகுதிநேர வேலை இருப்பதாகக் கூறினாராம். பின்னா் அது தொடா்பான லிங்க் ஒன்றை அனுப்பி அதில் பதிவு செய்யக் கூறியுள்ளாா். பின்னா் அவரிடம் இருந்து பல்வேறு தவணைகளாக சுமாா் ரூ.2,41,730-ஐ பல்வேறு வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.
இது குறித்து வேதக்கண் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இம்மோசடியில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement