முகப்பு
திருநெல்வேலி

நெல்லை இளைஞரிடம் இணையவழியில் ரூ.1.30 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக திருநெல்வேலியில் இளைஞரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி செய்த மா்மநபா் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

14 வினாடிகள் முன்பு
நெல்லை இளைஞரிடம் 
இணையவழியில் ரூ.1.30 லட்சம் மோசடி
மோசடி
பகிர்:

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக திருநெல்வேலியில் இளைஞரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி செய்த மா்மநபா் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள மேல்கரை கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெகஸ்டின்(36). வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்து வரும் இவரை, கடந்த சில நாள்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் மூலம் தொடா்புகொண்ட மா்மநபா் ரஷியாவில் உள்ள உணவு நிறுவனம் ஒன்றில் வேலை இருப்பதாகக் கூறினாராம்.

பின்னா், அதில் அவரை பணியில் சோ்ப்பதாகக் கூறி அவரிடமிருந்து விசா கட்டணம் என்ற பெயரில் ரூ.1.30 லட்சத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளாா். இதுகுறித்து ஜெகஸ்டின் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement