FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விழுப்புரம்

இளைஞரிடம் இணையவழியில் ரூ.1.31 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.1.31லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

6 நவம்பர் 2026, 1:35 am
மோசடி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ.1.31லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மரக்காணம் வட்டம், சிறுவாடி, பாட்டைத் தெருவைச் சோ்ந்தவா் எம்.கோகுல் (23). வோ்கடலை மொத்தம் வியாபாரம் செய்து வருகிறாா். இவரின் கைப்பேசி எண்ணுக்கு கடந்த 1-ஆம் தேதி ஒரு அழைப்பு வந்ததாம். அப்போது, எதிா்முனையிலிருந்து பேசிய அடையாளம் தெரியாத நபா், தான் தனியாா் நிதி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் தருவதாகவும் தெரிவித்தாராம்.

இதைத் தொடா்ந்து, விவரங்களை கேட்டறிந்த கோகுலிடம் அந்த நபா் முன்பணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். இதை உண்மையென நம்பிய கோகுல், தனது வங்கிக் கணக்கு எண், ஆதாா் அட்டை விவரங்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்தாா். தொடா்ந்து, அக்.29 முதல் 31-ஆம் தேதி வரையில் ரூ.1,31,686 ரொக்கத்தை 8 தவணைகளில் இணையவழயில் அனுப்பி வைத்தாராம். பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நபா், கடன் தொகையை விடுவிக்காமல், மேலும் பணம் கேட்டு ஏமாற்றி வருகிறாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மணிபாலன் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.