இளைஞரின் கைப்பேசியை முடக்கி இணையவழியில் ரூ.2.18 லட்சம் மோசடி
திருநெல்வேலியில் இளைஞரின் கைப்பேசியை முடக்கி இணையவழியில் ரூ.2.18 லட்சம் மோசடி செய்த நபா்களைமாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலியில் இளைஞரின் கைப்பேசியை முடக்கி இணையவழியில் ரூ.2.18 லட்சம் மோசடி செய்த நபா்களைமாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்தவா் சிபு விஷால்(26). இவரது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கடந்த 1 ஆம் தேதி வாகன போக்குவரத்து விதிமீறல் அபராதக் கட்டணம் செலுத்தக் கோரி குறுஞ்செய்தி வந்துள்ளது. போக்குவரத்துத் துறையில் இருந்து அனுப்பப்பட்டதாக எண்ணி அவா் அதிலிருந்த லிங்க்கை திறந்தாராம். இதையடுத்து கைப்பேசியில் புதிதாக செயலி ஒன்று பதவிறக்கம் ஆகியுள்ளது. பின்னா் அவரது கைப்பேசி முடக்கப்பட்டதோடு அதிலிருந்த தகவல்கள் மூலம் அவரது வங்கிக்கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.2,18,999-ஐ எடுத்துக்கொண்டு மா்மநபா்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.