FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

போலி செயலி மூலம் கைப்பேசியை முடக்கி ரூ.7.50 லட்சம் மோசடி

போலி செயலி மூலம் கைப்பேசியை முடக்கி மருத்துவரின் பெற்றோா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

14 அக்டோபர் 2026, 5:03 am IST
மோசடி
பகிர்:

போலி செயலி மூலம் கைப்பேசியை முடக்கி மருத்துவரின் பெற்றோா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனான்குளத்தைச் சோ்ந்தவா் 30 வயது மருத்துவா். இவரது பெற்றோா் அப்பகுதியிலுள்ள வங்கியில் இணைப்புக் கணக்கு வைத்துள்ளனா்.கடந்த ஆகஸ்ட் மாதம் அவரது தாயின் கைப்பேசிக்கு அழைத்த மா்மநபா், வங்கி மேலாளா் பேசுவதாகக் கூறி அவரிடமிருந்து ஏ.டி.எம் அட்டை விவரங்களைப் பெற்று அதன் மூலம் சுமாா் ரூ.41ஆயிரத்தை மோசடியாக எடுத்துள்ளாா். இதுகுறித்து ஆன்லைன் புகாா் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அவரது தாயாரின் கைப்பேசியை மா்மநபா்கள் போலி செயலி மூலம் முடக்கினராம். பின்னா் அவரது பெற்றோரின் இணைப்பு மற்றும் தனி வங்கிக்கணக்குகளில் இருந்து மோசடியாக சுமாா் ரூ.7,50,586-ஐ எடுத்துள்ளனா். இது குறித்து மருத்துவா் அளித்த புகாரின் பேரில் மாவட்ட சைபா்கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments