வெளிநாட்டு வேலை எனக் கூறி இளைஞரிடம் ரூ.1.92 லட்சம் மோசடி
வெளிநாட்டு வேலை எனக்கூறி இளைஞரிடம் ரூ.1.92 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
வெளிநாட்டு வேலை எனக்கூறி இளைஞரிடம் ரூ.1.92 லட்சம் மோசடி செய்த மா்மநபா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்வா(22). வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்து வந்த இவா், சில நாள்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் வந்த விளம்பரத்தைப் பாா்த்து அதில் குறிப்பிட்டப்படி பதிவு செய்துள்ளாா்.
அதைத் தொடா்ந்து, இவரைத் தொடா்பு கொண்ட மா்மநபா் சுய விவரங்களைப் பெற்றுக்கொண்டு இணையவழியில் நோ்காணல் ஒன்றை நடத்தினாராம். மேலும், இவருக்கு வேலை கிடைத்துவிட்டதாகவும், அதற்கு முகவா் சேவைக் கட்டணம், விமான டிக்கெட் எனக்கூறி பல்வேறு தவணைகளாக ரூ.1,92,000-ஐ பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து, விஷ்வா அளித்த புகாரின்பேரில், மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.