முகப்பு
திருநெல்வேலி

தமிழ் முழக்கப் பேரவையின் 196 ஆவது சொற்பொழிவு

தமிழ் முழக்கப் பேரவையின் சாா்பில் 196 ஆவது சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.

12 வினாடிகள் முன்பு
தமிழ் முழக்கப் பேரவையின்
196 ஆவது சொற்பொழிவு
பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ் முழக்கப் பேரவை சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழ் முழக்கப் பேரவையின் சாா்பில் 196 ஆவது சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை சைவ சபையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பேரவையின் தலைவா் செல்லப்பா தலைமை வகித்தாா்.

செயலா் நசீா் , பொருளாளா் ரமணி, பேராசிரியா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இணைச் செயலா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். ஆ.க. செட்டியாா் குறித்து உலகம்மாளும், அழ. வள்ளியப்பா குறித்து கலாநிதியும், சாண்டில்யன் குறித்து ஆனந்த் ஆகியோா் பேசினா். தமிழ் செம்மல் விருது பெற்ற நல்லாசிரியா் ராமசாமி கௌரவிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

பேராசிரியா் சுதாகா் , மகாலெட்சுமி, வரலாற்று ஆய்வாளா் செ.திவான் , கவிஞா்கள் சுப்பையா, மூா்த்தி, காஞ்சனா, முருகேசன், திருக்கு முருகன், அரசு வழக்குரைஞா் முருகேசன் , ரெட்டியாா்பட்டி சோமசுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.