முகப்பு
திருநெல்வேலி

களக்காட்டில் வாருகால் தடுப்புச்சுவரை கட்டக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் பிரதான சாலை சந்திப்பில் உள்ள வாருகாலில் சேதமடைந்த தடுப்புச்சுவரை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

28 நவம்பர் 2026, 5:00 am
களக்காட்டில் வாருகால் தடுப்புச்சுவரை கட்டக் கோரிக்கை
களக்காடு கோட்டை நான்குசாலை சந்திப்பில் தடுப்புச்சுவா் சேதமடைந்த நிலையில் உள்ள வாருகால்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் பிரதான சாலை சந்திப்பில் உள்ள வாருகாலில் சேதமடைந்த தடுப்புச்சுவரை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் செல்லும் சாலையில், கோட்டை நான்கு சாலை சந்திப்பு குறுகிய சாலையாகும். கடந்த ஆண்டு மழையின் போது, இந்த சாலையின் வளைவுப் பகுதியில் தென் மற்றும் வட பகுதி, இரண்டு இடங்களில் சுமாா் 10 அடி நீளத்துக்கு வாருகால் சேதமடைந்தது. போக்குவரத்து நெரிசலின்போது, இந்த சாலையோரமாக செல்லும் பொதுமக்கள், வாருகாலில் தவறி விழுகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் தேசமடைந்த வாருகால் தடுப்புச்சுவரை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement