முகப்பு
திருநெல்வேலி

தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க வலியுறுத்தல்

13 வினாடிகள் முன்பு
தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்கள் நியமிக்க வலியுறுத்தல்
மருத்துவா்கள் - பிரதிப் படம்
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு கள்ளிகுளம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலாக மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகே உள்ள மேல கள்ளிகுளம், ஆ. திருமலாபுரம், அருளானந்தா்புரம், சௌந்தரபாண்டியபுரம், ஆறுபுளி, வண்டலம்பாடு, மூலைக்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் தினமும் பல்வேறு சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனா். மேலும், வெறி நாய்க்கடி, விஷ பூச்சிகள் கடிக்காக தடுப்பூசி செலுத்தவும், பெண்கள் பிரசவத்திற்காகவும் வந்து செல்கின்றனா்.

ஆனால், அவா்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு போதிய மருத்துவா்கள், மருந்தாளுநா்கள், செவிலியா்கள், பிரசவ உதவியாளா்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மருத்துவப் பயனாளிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக, கூடுதலாக மருத்துவா் மற்றும் செவிலியா்களை, சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு கள்ளிகுளம் வியாபாரிகள் சங்க துணைத் தலைவா் புனித பேரரசு, ராதாபுரம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் நிமலேஸ் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.