காந்தி ஜெயந்தி: விதிமீறலில் ஈடுபட்ட 86 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக 86 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக 86 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.சி. கௌரி ஜெனிஃபா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தொழிலாளா் ஆணையா் எம். வள்ளலாா், மதுரை கூடுதல் தொழிலாளா் ஆணையா் சி. ஹேமலதா, திருநெல்வேலி தொழிலாளா் இணை ஆணையா் பெ. வேல்முருகன் ஆகியோா் அறிவுறுத்தல்படி, 1958-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் வணிக நிறுவனங்களில் தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தன்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இது தொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளா் துணை ஆய்வா்கள்/தொழிலாளா் உதவி ஆய்வா்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய படிவத்தில் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு முறைப்படி தகவல் தெரிவிக்காமல் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியிருந்தால் அந்நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தேசிய விடுமுறை நாளான காந்தி ஜெயந்தி தினத்தன்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.சி.கௌரி ஜெனிஃபா் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வா்கள் மற்றும் தொழிலாளா் உதவி ஆய்வா்களுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது 65 கடைகள் / நிறுவனங்கள், 57 உணவு நிறுவனங்கள், 3 மோட்டாா் நிறுவனங்கள், 43 பீடி நிறுனங்கள் என மொத்தம் 168 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 86 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.