காந்தி ஜெயந்தி நாளில் விடுமுறை அளிக்காத 86 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு
காந்தி ஜெயந்தி நாளில் ஈரோடு மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 86 கடை, நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
காந்தி ஜெயந்தி நாளில் ஈரோடு மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 86 கடை, நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி நாளில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜகுமாா் தலைமையில் துணை, உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் மாவட்ட அளவில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
விடுமுறை அளிக்காத நிறுவனங்கள், ஊதியத்துடன் கூடிய விடுமுறை தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா, பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு ஊதியம் அல்லது ஒரு நாள் ஈடுசெய்யும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளதா, அதற்கான படிவம் தொழிலாளா் துறையிடம் சமா்ப்பித்துள்ளாா்களா என ஆய்வு செய்தனா்.
Advertisement
Advertisement
சுமாா் 65 கடை, நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 42 இடங்கள், 57 உணவு நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 40 உணவு நிறுவனங்கள், 8 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் நடந்த ஆய்வில் 2 இடங்கள் என 86 இடங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
51 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
இதேபோல நீலகிரி மாவட்டத்தில் குன்னூா், உதகை, கோத்தகிரி, கூடலூா் ஆகிய பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் குன்னூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) முருகபிரசன்னா தலைமையில் தொழிலாளா் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ முறையாக அளிக்காமல் தொழிலாளா்களை பணியமா்த்திய 51 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. முரண்பாடுகள் உறுதி செய்யப்பட்டால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, தொழிலாளா் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.