FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 57 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 57 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

3 October 2026, 1:17 am IST
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 57 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.செந்தில்குமரன் தலைமையில், தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்களால் காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து வெள்ளிக்கிழமை கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிா அல்லது பணியாளா்கள் பணிபுரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு ஊதியமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமுறை நாள்கள்) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

26 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 15 நிறுவனங்களிலும், 48 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 42 இடங்களிலும், 5 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு என மொத்தம் 79 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 57 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு ஊதியம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணிநேரத்துக்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா் நலத் துறையால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments