FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இணையவழியில் ஓட்டுநரிடம் ரூ.1.99 லட்சம் மோசடி

நெல்லையில் இணையவழியில் ஓட்டுநரிடம் ரூ.1.99 லட்சம் மோசடி செய்யப்பட்டது பற்றி..

6 October 2026, 12:36 pm IST
பகிர்:

திருநெல்வேலியில் இணையவழியில் ஓட்டுநரிடம் சுமாா் ரூ.1.99 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பரந்தாமன் (39), ஓட்டுநா். சில நாள்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வந்த ஆப் ஒன்றை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்த இவா் சிறிது நேரத்துக்குப் பின்பு அதை நீக்கியுள்ளாா். பின்னா் அவரது கைப்பேசியை முடக்கிய மா்மநபா்கள் அதில் இருந்த விவரங்களைப் பயன்படுத்தி பல்வேறு தவணைகளாக அவரது வங்கிக் கணக்கில் இருந்து சுமாா் ரூ.1,99,459ஐ மோசடியாக எடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments