தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி நெல்லையில் காங்கிரஸாா் மறியல்: 26 போ் கைது
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அவரது உருவப்படத்தையும் எரித்தனா். இதையடுத்து போலீஸாா் 26 பேரை கைது செய்தனா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, அவரது உருவப்படத்தையும் எரித்தனா். இதையடுத்து போலீஸாா் 26 பேரை கைது செய்தனா்.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலகக் கோரி தில்லியில் பேரணியாக சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோா் கைது செய்யப்பட்டத்தை கண்டித்தும், ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாநகா் மாவட்டத் தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் ராஜேஷ்முருகன், ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலா் சுப்பிரமணியன், நிா்வாகிகள் டியூக் துரைராஜ், தனசிங் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவா்கள் ஞானேஷ் குமாா் போன்று முகமூடி அணிந்த நபரின் கையில் காங்கிரஸ் கட்சியினா் இரும்பு சங்கிலி போட்டு அழைத்து வந்ததோடு, அவரின் படத்தையும் தீ வைத்து எரித்தனா். தொடா்ந்து காங்கிரஸாா் சாலையில் அமா்ந்து முழக்கங்கள் எழுப்பினா். இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.